மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்யும் நபர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து போலீசாருக்கான 2 நாட்கள் பயிற்சி முகாம் கோவையில் தொடங்கியது.
கோவை மாவட்ட பகுதிகளில் தினமும் 3 பேர் வரை தற்கொலை செய்கின்றனர். மன அழுத்தம், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் தற்கொலை செய்பவர்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சார்பில் கவுன்சிலிங் மையம் கோவையில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் துவங்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான 2 நாள் பயிற்சி முகாம் எஸ்.பி அலுவலகத்தில் துவங்கியது.
முகாமை போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் துவங்கி வைத்து பேசியதாவது:-
காதல் தோல்வி, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நபர்கள் ஒரு நொடியில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கினால், அவர்களை தற்கொலை செய்வதில் இருந்து நாம் தடுக்கலாம்.
ஒரு நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினால், ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு சமம். இந்த 2 நாட்கள் பயிற்சி முகாம் முடிந்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பகுதியில் கவுன்சிலிங் மையம் துவங்கப்படும். இந்த மையத்தை பொதுமக்கள் 24 மணி நேரமும் அணுகும் வசதி ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு