கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான் பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10,11,12 மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ரேண்டம் முறையில் கொரொனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரேண்டம் முறையில் கொரொனா சோதனை நடத்தப்பட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.இதனையடுத்து அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(6.9.21) பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சுல்தான் பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 33 மாணவர்களுக்கு சோதனை செய்ததில் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் 3 மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவ மாணவர்களுக்வு சுகாதாரத்துறையினர் இன்று கொரொனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
தொற்று ஏற்பட்ட மாணவர்கள் 3 பேருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு