• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது !

September 5, 2021 தண்டோரா குழு

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாக பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் ஆசிரியர்களுக்கு விருதினை வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஒண்டிப்புதூர், மேட்டுப்பாளையம், ஒத்தகால் மண்டபம்,பிரஸ் காலனி, கல்வீரம்பாளையம், சூலூர் ஆகிய 13 இடங்களில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் 13 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதுகளை வாங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் படிக்க