• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஃபோக்ஸ்வேகன் ‘டைகுன்’ (TAIGUN) காரை அறிமுகம் நடிகை ப்ரணிதா !

September 4, 2021 தண்டோரா குழு

கோவையில் ஃபோக்ஸ்வேகன் ‘டைகுன்’ (TAIGUN) காரை சகுனி திரைப்பட நடிகை ப்ரணிதா இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் முன்னோட்டம் நடைபெற்றது. முன்னதாக பெங்களூர் மற்றும் சென்னையில் மட்டும் இந்த காரின் முன்னோட்டம் நடைபெற்ற நிலையில் மூன்றாவதாக காரின் அறிமுக நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய தலைவர் ஆஷிஷ் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை ப்ரணிதா கலந்து கொண்டு டைகுன் காரினை வருங்கால வாடிக்கையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்பு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதனை தொடர்ந்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய தலைவர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது,

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி.டபிள்யூ கார் வகைகளுள் ஒன்றாக இந்த டைகுன் உள்ளது. வரும் 23ம் தேதி இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. பல்வேறு சிறப்பசங்களுடன் ஐந்த வைப்ரண்ட் வண்ணங்களுடன் கார் வெளியாகிறது.காரி விலை விவரங்களும் 23ம் தேதியே வெளியாகும்.

தென்னிந்தியா எங்களுக்கு பலமான சந்தையாக உள்ளது. இந்தியாவில் எங்கள் நிறுவனம் செய்யும் விற்பனையில் தமிழகத்தில் மட்டும் 16 சதவிதம் உள்ளது. நிச்சயம் இந்த கார் மூலம் இரட்டிப்பு விற்பனையை அடைவோம்.

மேலும் படிக்க