• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வெறிச்சோடிய முக்கிய வீதிகள் !

September 4, 2021 தண்டோரா குழு

கோவையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் கடையை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டதுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவையில் கொரோனா தொற்று அதிகம் காணப்படுவதால் கோவையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 44 பகுதியில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மருந்தகம் காய்கறி கடைகள் தவிர மற்ற நகைக்கடைகள், துணிக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட என்_எச்_ரோடு.,டவுண் ஹால்.,கிராஸ்கட் சாலை ,100 அடி சாலை., ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை குறிப்பிட்ட 44_பகுதிகளில் மக்கள்‌ கூட்டம்‌ அதிகமாக காணப்படுவதால்‌ அத்தெருக்களில்‌ இயங்கும்‌ அத்தியாவசிய கடைகளான பால்‌, மருந்தகம்‌, காய்கறி கடைகள்‌ தவிர மற்ற கடைகள்‌ அனைத்தும்‌ சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ இயங்க தடை விதித்துள்ளார்.

அதன்படி இன்று அத்தியாவசியத் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் படிக்க