• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாஸ்காமின் ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் உடன் கூட்டணியை அறிவித்தது எல்ஜி !

September 1, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி ஏர் கம்ப்ரஸர் உற்பத்தியாளர்களில் ஒருவரான எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் (BSE: 522074 NSE: ELGIEQUIP), நாஸ்காமின் ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் உடன் கூட்டணியை அறிவித்தது.

இதன் மூலம், எல்ஜி ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரு அடிப்படை டிஜிட்டல் திறன்களைக் கொண்ட ஒரு டிஜிட்டல் சூழலில் செயல்படுவதற்கும், தொடர்ந்து வேலை செய்யும் புதிய வழிகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கும், தானியங்கி அமைப்புகள் மற்றும் இயந்திரங்கள் மூலம் செய்யக்கூடியதைத் தாண்டி மதிப்பைச் சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்ட திறன்களை வளர்க்கும் திட்டம், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், நாஸ்காம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் இயக்கப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்ஜி ஊழியர்கள் இந்த பயிற்சியினை மேற்கொள்ள உள்ளனர்.

எல்கி எக்யுப்மென்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜெய்ராம் வரதராஜ் கூறியதாவது,

“ஒவ்வொரு பங்குதாரருக்கும் சிறந்த அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த நோக்கத்திற்கான எங்கள் பயணத்தில், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் மையதூண்களாக இருக்கும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் மூலம் கணிசமான அனுபவத்தை வழங்க முடியும்.

இது பணியாளர்களால் கட்டமைக்கப்பட வேண்டும் மற்றும் தொடக்க புள்ளியாக டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் வாய்ப்புகளை கற்பனை செய்ய வேண்டும்.இதற்கு எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு டிஜிட்டல் தொழில் நுட்பங்களைப் பற்றிய அடிப்படை அறிவை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

எங்கள் ஊழியர்கள் அனைவரும் டிஜிட்டல் திறமையுள்ளவர்களாக இருப்பதையும், எதிர்காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழில் நுட்ப அறிவாற்றல் உள்ளவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ப எங்களை மாற்றியமைத்துக் கொள்கிறோம்” என்றார்.

SSC நாஸ்காம்’ன் தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்தி சேத் கூறுகையில்,

“நாம் இந்த டிஜிட்டல் மாற்றத்தின் வாயிலாக ஒவ்வொருவரும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களின் திறன்களைக்கொண்டிருப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு தனிநபரும் ‘டிஜிட்டல்’ மொழியைப்பேசுவது மற்றும் நம்மைச்சுற்றி வேகமாக மாறி வரும் உலகத்துடன் இசைந்து இருப்பதும் முக்கியம். ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் பல துறைகளைச் சேர்ந்த பல பணிகளில் உள்ள தனிநபர்களை டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் திறன்களைக் கொண்டவர்களாக உருவாக்கும் தொலைநோக்கு பார்வை கொண்டுள்ளது.

எங்களது இந்த முயற்சி தொழில் துறைகளால் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.ஒரு முன்னணி கம்ப்ரஸர் உற்பத்தி நிறுவனமான எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைமை தங்கள் ஊழியர்களின் டிஜிட்டல் அறிவினை வளர்த்திட பயன்படுகிறது, இது அனைத்துத் தொழில்களிலும் களங்களிலும் டிஜிட்டல் அறிவின் தேவை உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரமாகும்.எல்ஜி ஊழியர்கள் ஒரு அற்புதமான கற்றல் பயணத்தை பெற வாழ்த்துகிறேன்.அவர்களின் தொழில் நுட்ப அஸ்திவாரங்களை வளர்ப்பதுமட்டுமல்லாமல் புதிய படைப்பாற்றலை வெளிக்கொணர ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த டிஜிட்டல் அறிவினை வளர்த்துக் கொண்ட பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒரு டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கும் இந்தியாவின் கனவுக்கு மிகுந்த பங்களிப்பார்கள் என்பதை உறுதியாய் கூறுகிறேன்.

ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் அரசு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையால் உருவாக்கப்பட்ட ஒரு தளம். செயற்கை நுண்ணறிவு கிளவுட் கம்ப்யூட்டிங் சைபர் பாதுகாப்பு, பெரிய தரவு பகுப்பாய்வு, ரோபோடிக் செயல் முறை, ஆட்டோ மேஷன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு மக்களை மேம்படுத்தும் போது சவால்களுக்கு தீர்வு காண முடிகின்றது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள்,டிஜிட்டல் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். திறனறிதல் சோதனைகளை செய்யலாம். எஸ்எஸ்சி நாஸ்காம் ( SSC NASSCOM ) சான்றிதழ்கள் மற்றும் உதவித்தொகைகளைப் பெறலாம் என்றார்.

மேலும் படிக்க