August 31, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக சில கோரிக்கைகளை முன்வைத்து தமிழக ரிவைவ்வல் எக்ஸ்பர்ட் கமிட்டி தலைவருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது குறித்துஅச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் மனுவில் கூறியிருப்பதாவது,
‘கார்ப்பரேட் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு உற்பத்தி சார்ந்த உதிரி பாகங்களை நமது மாநிலத்தில் உள்ள குறு சிறு தொழில் முனைவோர்களிடம் இருந்து கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெருக்கடியில் உள்ள குருந் தொழில் முனைவோர்கள் பயன்படுத்தும் 50 எச்பி யார் வரை மின்சாரத்திற்கு மானியம், அரசுக்கு சொந்தமான தாய்க்கோ வங்கி மற்றும் தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் புதிய கடன் திட்டம் அறிவிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் நகர மையப்பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து பிரதான சாலைகளிலும் சிறு குறு தொழில் பேட்டைகள் அமைக்க வேண்டும். பெரும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 30 நாட்களில் செய்து கொடுக்கும் பணி களுக்கு பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் பயன்பெரும் வகையில் காப்புறுதி திட்டங்கள் உள்ளிட்டவை கொண்டு வரும் வகையில் குறுந்தொழில் வாரியம் அமைக்க வேண்டும்.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 25% ஜாப் ஆர்டர் வழங்க வேண்டும். மேலும், கோவையில் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனம், குறு சிறு தொழில் முனைவோர்களுக்கு தணி சந்தைகள், , ஜி. எஸ்.டி வரி விலக்கு ஆகியவை அமைத்து குறுந் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.