• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 5 கிலோ கஞ்சா, 1,10,000 ரூபாய் பணம் பறிமுதல் – வடமாநில இளைஞன் கைது

August 31, 2021 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்துவந்த வடமாநில இளைஞனை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான காவல்துறையினர் பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்த வட மாநில இளைஞன் போலீசாரை கண்டது இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளான். இதையடுத்து போலீசார் அவனை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது அவன் வைத்திருந்த மூட்டையில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மண்டூஸ் குமார் என்பதும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதும், தற்போது கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அவனிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு செல்போன் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவனை நீதிபதிமுன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க