• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

August 31, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அதிமுக சார்பாக அணைத்து இடங்களிலும் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் மாணவர்கள் நலன்கருதி கொண்டுவரபட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலை கழகத்தை திமுக முடக்கும் நோக்குடன் செயல்படுவதை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் முன்னால் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி கொரடா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

மேலும் திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை ரத்துசெய்யும் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர், முன்னால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கைதுசெய்து அடக்குமுறையில் ஈடுபட்ட திமுக அரசை கண்டித்து கோவை குணியமுத்தூர் பகுதியில் பகுதிகழக செயலாளர் மதனகோபால் தலைமையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோவை பூமார்க்கெட், காந்திபுரம், கோவைபுதூர் உட்பட மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க