August 31, 2021
தண்டோரா குழு
கோவையில் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த ஆடுகளை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை வடவள்ளியையடுத்த சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் மற்றும் ராஜமாணிக்கம் ஆகிய நண்பர்கள் இருவரும் இணைந்து 12 ஆடுகளை அதே பகுதியில் வளர்த்து வருகின்றனர்.இதில் ராஜமாணிக்கம் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பின்னர் வீட்டின் வெளியே உள்ள காலி இடத்தில் கட்டி வைப்பது வழக்கம்.
இந்நிலையில்,நேற்று கட்டிவைத்து அவர் வழக்கம் போல உறங்கச் சென்றுள்ளார். அப்பொழுது வழக்கத்திற்கு மாறாக ஆடுகள் சத்தம் போட்டுள்ளன. ஆடுகளின் சத்தத்தை கேட்டு தூங்கிக் கொண்டிருந்த ராஜமாணிக்கம் மற்றும் அவரது வீட்டருகே வசிக்கும் சதீஷ்குமார் ஆகியோர் எழுந்து வந்து பார்த்த போது ஆடுகளை மர்ம நபர்கள் திருட வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து,ஆடு திருட வந்தவர்களை விரட்டிப் பிடித்து வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் போலீசார் கைது செய்த சரவணன் மற்றும் சண்முகம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.