• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு திரட்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாரத் கிஷான் யூனியன்

August 30, 2021 தண்டோரா குழு

கடந்த 275 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர் 270 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். இருந்தபோதும் மத்திய அரசு எந்தவித செவி சாய்க்கவும் இல்லை என்று விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவாக பாரத் கிஷான் யூனியன் சார்பாக ராஜிந்தர் சிங் கோல்டன் என்பவர் தமிழகம் முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக ஆதரவு திரட்டியும் ஆட்களை சேகரித்தும் வருகிறார் அதன் ஒரு பகுதியாக கோவை வந்த இவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தற்போது வரை டெல்லியில் போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் மொத்தம் ஆறு லட்சம் ஊர்கள் உள்ளன. ஊருக்கு ஒருவர் வந்தாலும் ஆறரை லட்சம் பேர் விவசாயிகளுக்காக போராடி வெற்றி பெறலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக போராடிய விவசாயிகள் அனைவரும் மீதும் போடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என தற்போதைய தமிழக அரசு அறிவித்ததை மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக கருதுகிறேன் எனவும் பாராட்டக்கூடிய விஷயம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்தப் பயணமானது தமிழகம் முழுவதும் சென்று பரப்புரை மேற்கொண்டு ஆட்களை திரட்டி செல்ல என உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க