August 30, 2021
தண்டோரா குழு
வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் எதற்காக கொண்டு வரப்பட்டது என தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பேச வேண்டும் என தெரியாமல் புத்திபேதலித்து பேசி வருகிறார் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 27 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இரத்த தான முகாம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம், வேளாண் சட்டம், மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டோரின் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலான சிறையில் உள்ள கைதிகளை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதே போல் ஊட்டி நகராட்சியில் கடந்த ஆட்சியில் இருந்த ஆணையர் சரஸ்வதி கடைகளை மூட உத்தவிட்டார். அவர் அப்போது முழுமையாக அதிமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டார். அங்கு மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறக்க வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை உருவாக்கி ஏற்கனவே கடை அமைத்தவர்களுக்கும் முன்னுறிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளடி்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக அரசு ஆதரவாக இருந்தது. ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்தது. இப்போது எதிர்கட்சியாக இருக்கும் போதும் அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தற்போதைய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கேரளாவில் தொற்று அதிகரித்த போதும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதே போல் முந்தைய அதிமுக அரசு செயல்பட்டிருந்தால் இரண்டாம் அலையை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார். தமிழக சட்டன்றத்தல் ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் பாஜகவிற்கு எதிராக உள்ளது என காட்டிவிட்டது. இந்த தீர்மானம்எதற்காக கொண்டு வரப்பட்டது என தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பேச வேண்டும் என தெரியாமல் புத்திபேதலித்து பேசி வருகிறார் என தெரிவித்தார்.