• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 1975 முதல் 1987-களில் பயன்படுத்தப்பட்ட போலீஸ் வேன் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைப்பு !

August 27, 2021 தண்டோரா குழு

கோவையில் 1975 முதல் 1987-களில் பயன்படுத்தப்பட்ட போலீஸ் வேன் புதுப்பிக்கப்பட்டு சென்னை போலீஸ் அருங்காட்சியகத்திற்கு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு பழுதாகி இருந்த போலீஸ் வேன் மாவட்ட எஸ்.பி செல்வர் நாகரத்தினத்தின் தீவிர முயற்சியால் பழுது பார்க்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு மீண்டும் செயல்படும் நிலைக்கு உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று சென்னையில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்திற்கு அந்த வேன் நினைவுச் சின்னமாக அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம்,மோட்டார் வாகன பிரிவில் காவலர்கள் அலுவலுக்கு 1975 ஆம் ஆண்டு முதல் 1987ஆம்ஆண்டு வரை பயன்படுத்தி தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் அறியவகை மாடல் (TNE6000 Hindusthan Bedford 1974) என்ற வாகனத்தை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் முழு முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு சென்னையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு இன்று(27.08.2021) காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க