August 27, 2021
தண்டோரா குழு
கோவையில் திமுக பிரமுகருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் மிரட்டல் – மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுகவினர் புகார் அளித்தனர்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரபு. இவர் அதிமுகவில் மாநில பொறுப்பில் இருந்தவர், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அன்றிலிருந்தே, இவருக்கு அதிமுகவினர் அரசியல் ரீதியாக பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில்,கடந்த 12 ந்தேதி, ஒரு யூடூப் சேனலில்,கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.இந்நிலையில், எஸ்பி.வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா பிரியா என்பவர், விஷ்ணுபிரபு மீது கேரள மாநிலம், சோலையார் காவல்நிலையத்தில் பொய்யான புகாரை அளித்துள்ளதாகவும் அதன்பேரில் கேரள காவல்துறையினர் விசாரணைக்கு வரும்படி கூறியுள்ளனர்.
இதற்கிடையே,முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின்பேரில், மர்ம நபர்கள் விஷ்ணுபிரபு விற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மர்ம நபர்கள் விடுத்த மிரட்டல் தொடர்பாகவும்,இதற்கு தூண்டுகோளாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதுகாப்பு கோரியும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம், விஷ்ணுபிரபு, திமுக பகுதி கழக பொறுப்பாளர் வம.சண்முகசுந்தரம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, ஆர்ஆர்.மோகன்குமார், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திமுகவினர் மனு அளித்தனர்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி, விஷ்ணு பிரபு வீட்டிற்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு போட உத்திரவிட்டதுடன். இந்த புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பாக, விஷ்ணுபிரபு பேட்டியின்போது கூறுகையில்;-
தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்ததிலிருந்தே,அரசியல் ரீதியாக மிரட்டல்கள் வருவதாகவும், தான் யூடீப் சேனால் ஒன்றில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்.அதனால்,தன் மீது பொய் வழக்கை ஒன்றை சோலையார் காவல்நிலையத்தில் போட்டுள்ளனர்.எஸ்பி.வேலுமணிக்கு டெண்டர் தொடர்பாக சோலையாரில் உள்ள பண்ணை வீட்டில் தான் முடிவு செய்யப்படும். அந்த பண்ணை வீட்டை டுரோன் மூலம் பதிவு செய்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த நிலையில்,வேலுமணியின் தூண்டுதலின்பேரில் மர்ம நபர்கள் தன்னையும், தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்தவர்,வேலுமணி மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும்,அதை தேவையான நேரத்தில் வெளியிடுவேன் என தெரிவித்தார்.