• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

August 24, 2021 தண்டோரா குழு

போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம்( சி.ஐ.டி.யூ) சார்பில் கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலுலம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்,போக்குவரத்து பணிமனைகளுக்கு தேவையான உதிரிபாகங்களை வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டல சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வேளாங்கண்ணிராஜ், ஈரோடு மண்டல பொதுசெயலாளர் ஜான்சன் கென்னடி, திருப்பூர் மண்டல தலைவர் கந்தசாமி, நீலகிரி மாவட்ட தலைவர் சுந்தரம், அரசு விரைவு போக்குவரத்து கழக மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க