• Download mobile app
21 Nov 2025, FridayEdition - 3572
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பாதுகாப்பு பணியில் 25,000 காவல்துறையினர்.

December 6, 2016 தண்டோரா குழு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புப் பணியில் சுமார் 25,000 காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு சென்னையில் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) நடைபெறவுள்ளது. முன்னதாக, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னையில் ஏற்கெனவே 15,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மறைந்த முதல்வரின் இறுதிச்சடங்கில் பல லட்சம் அதிமுகவினர், பொதுமக்கள் பங்கேற்பார்கள். இதைத் தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் உள்பட எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெற்று விடக்கடாது என்பதைக் கருத்தில்கொண்டு சென்னை நகரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வெளிமாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், இளைஞர் படையினர், அதிவிரைவு படையினர், அதிரடிப் படை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேரந்த காவலர்கள் சுமார் 10,000 பேர் செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு சென்னைக்கு வரும்படி டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் சென்னைக்கு வந்ததும் நேரு உள்விளையாட்டரங்கில் தங்களது பெயரைப் பதிவு செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். அவர்கள் தங்குவதற்காக சென்னையில 500 திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றில் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இறுதிச் சடங்கு முடிந்த பின்னரே வெளிமாவட்டங்களுக்கு செல்வார்கள் என காவல்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க