• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்னூர் விவகாரத்தில் வீடியோவை மறைத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

August 19, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் விவகாரத்தில் வீடியோவை மறைத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர்கள் ஆகியோர் அளித்த தவறான தகவலின் காரணமாக அவதூறு பரப்பப்பட்டு ,விவசாயி கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உண்மை நிலையை அறிந்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம் விவசாயி கோபால்சாமி குற்றமற்றவர் ஆகி விடுகிறார்.எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.மேலும் தொடர் போராட்டங்களை தவிர்த்திட வழக்கு ரத்து நடவடிக்கை உதவும்.

அதே போல் வீடியோவை மறைத்து இந்த சம்பவத்திற்கு காரணமான நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க