August 19, 2021
தண்டோரா குழு
நாட்டின் மிக நம்பகமான தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஒரு தனித்துவமான நவீன பாதுகாப்பு தீர்வான எஸ்பிஐ லைஃப் இஷீல்டு நெக்ஸ்ட் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
காப்பீடு செய்தவர் வாழ்வின் முக்கிய கட்டங்களை அடையும்போது அடுத்த நிலை நோக்கி முன்னெடுக்கும் ஒரு முழுமையான பாதுகாப்பாக இது இருக்கும். தனிநபர் சார்ந்த, இணைப்பற்ற, பங்கேற்பு இல்லாத, ப்யூர் ரிஸ்க் பிரீமியம் ஆயுள் காப்பீட்டு திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு அவசியமான காப்பீட்டு பாதுகாப்பின் அடுத்த நிலையைத் அடைவதன் மூலமாக வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களை நுகர்வோர் அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் திருமணமாவது, பெற்றோர் ஆவது, புதிதாக வீடு வாங்குவது போன்ற வாழ்வின் முக்கியமான தருணங்களின் போது, குறிப்பிட்ட தொகை அதிகரிக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளதால் தேவையான காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.
நவீன பாதுகாப்பு தீர்வான இஷீல்டு நெக்ஸ்ட்டின் தனித்துவமான விற்பனை முன்மொழிவு அதன் லெவல்-அப் அம்சமாகும்; பாதுகாப்பை அடைதல், பாதுகாப்பை உயர்த்துதல், எதிர்கால காப்பு பலன்களுடன் பாதுகாப்பை அடைதல் என்று மூன்று விருப்பங்கள் இதில் தரப்படுகின்றன. நுகர்வோரின் மாறும் தேவைகளை எதிர்கொள்ளும்வகையில், ஒவ்வொன்றும் சிந்தித்து உருவாக்கப்பட்டுள்ளன.
விருப்பம் 1:
பாதுகாப்பை அடையும் பலன் இதில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொகை பாலிசி காலம் முழுவதும் ஒரேமாதிரியாக இருக்கும்.
விருப்பம் 2:
பாதுகாப்பை உயர்த்தும் பலன் – இதில், பாலிசியின் ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் இருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படைத் தொகையில், ஒவ்வொரு ஆண்டும் (எளிமையாக) 10 சதம் வீதம் மரணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட முழுமையான தொகை அதிகரிக்கும்.
விருப்பம் 3:
எதிர்கால காப்பு பலன்களுடன் பாதுகாப்பை அடைதல் திருமணமாவது, பெற்றோர் ஆவது, புதிதாக வீடு வாங்குவது என்று வாழ்வின் முக்கியக்கட்டங்களை அடையும்போது தானாகவே தங்களது பாதுகாப்பை உயர்த்தும் வாய்ப்பை நுகர்வோர்களுக்கு வழங்குகிறது அப்போது, எவ்வித மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுத்தப்பட மாட்டாது.
பாலிசியை வாங்கும்போது, தங்களுக்குப் பொருத்தமான காப்பீட்டு தேவைகளுக்கேற்ப சிறந்த ஒன்றை நுகர்வோர்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
எஸ்பிஐ லைஃப் இஷீல்டு நெக்ஸ் அறிமுகம் குறித்து எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸின் தலைவர் எம்.ஆனந்த் பேசுகையில்,
தற்போது நிலவும் நோய்த்தொற்று, இதுவரை இல்லாத அளவுக்கு மிக சுறுசுறுப்பாகச் செயல்படுவதைக் கற்றுத் தந்துள்ளது. அதிகளவில் உள்ள நிலையற்ற தன்மையுடன், இன்றைய வாழ்க்கைத் தேவைகளை எதிர்கொள்ள உதவுவது மட்டுமல்லாமல் ஒருவரது வாழ்வில் உருவாகும் முன்னுரிமைகளையும் கவனிக்கும் வகையில் ஆயுள் காப்பீடு அல்லது நிதித் திட்டமிடுதல் சார்ந்த நமது அணுகுமுறையில் நிலையை உயர்த்துதல் மிக முக்கியம். பெயரில் குறிப்பிடப்படுவது போலவே, எஸ்பிஐ லைஃப் இஷீல்டு நெக்ஸ்ட் ஒரு விரிவான நிதி பாதுகாப்பு தீர்வாகும்; இது, நுகர்வோரின் இன்றைய தேவைகள் மட்டுமல்லாமல் எதிர்காலத் தேவைகளின் அடிப்படையில் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய ஆனந்த்,
நுகர்வோர் வாழ்வில் உருவாகும் தேவைகளுக்கேற்ப, தங்களது ஆயுள் காப்பீட்டு பாலிசியை வடிவமைப்பதற்கான தன்னாட்சியை வழங்குகிறது எஸ்பிஐ லைஃப் இஷீல்டு நெக்ஸ்ட். நுகர்வோர்களின் அதிகரித்து வரும் தேவைகளை எதிர்கொள்ளப் பொருத்தமான சமகால, எதிர்கால நிதித் தீர்வாக இது அமையும். ஒரேயொரு பாலிசியின் கீழ் நுகர்வோரின் தற்போதைய, எதிர்காலத்தேவைகளைப் பூர்த்தி செய்ய, இதிலுள்ள பல நன்மைகள் அனுமதிக்கும்; எஸ்பிஐ லைஃப் இஷீல்டு, நம் நாட்டில் காப்பீட்டு பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.