• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

August 18, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட உப்பிலிபாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தூய்மைப் பணியாளர்களிடம் கூறுகையில்,

நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். வீடுதோறும் குப்பைகளை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும். கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்,’’ என்றார்.

தொடர்ந்து எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி ஏரோட்ரூம் ரோடு, கங்கா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டு வரும் பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, கால்வாயில் நீர் தேங்காமல் சீராக செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அலுவலர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் (கிழக்கு) ஞானவேல், கிழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க