• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

August 18, 2021 தண்டோரா குழு

கோவையில் கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக இலவச கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக வாகரயம்பாளையம் பகுதி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் அரசு சார்பில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு ஒரு டோஸுக்கு கணிசமான தொகையை மருத்துவமனை நிர்வாகம் பெற்று கொண்டு ஊசி போடுகிறது.

இந்நிலையில் நிறுவனங்களுக்கான சி.எஸ்.ஆர் நிதியை கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் அண்மையில் தமிழக அரசால் துவங்கப்பட்டது.இதனை தொடர்ந்து கோவை கே.எம்சி.எச்.மருத்துவமனை சார்பாக இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக வாகரையம்பாளைம் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு 500 டோஸ் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முன்னதாக இதற்கான துவக்க விழா வாகரயம்பாளையம் ஆரம்ப சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன், கே.எம்.சி.எச்.மருத்துவகல்லூரி மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயன், மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரா, கோவிட் நோடல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த இலவச தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்த உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க