• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிற்சாலை பணியாளர்களுக்கு 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு

August 17, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட தொழில் மையம், தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து தடுப்பூசி முகாம் மூலம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுவரை தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து சுமார் 35 ஆயிரம் டோஸ் தடுப்பூசி தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசி தொழிலாளர்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொழில் கூட்டமைப்புகளுக்கு தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தங்களது விருப்பத்தினை உடனடியாக தொழில் கூட்டமைப்புகளுக்கோ அல்லது கோவை மாவட்ட தொழில் மையத்திற்கோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 8925533934, 8925533935, 8925533936.

மேலும் படிக்க