• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒப்பந்ததாரர் பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை கமிஷனரிடம் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் புகார்

August 17, 2021 தண்டோரா குழு

ஒப்பந்ததாரர் ரூ.1.50 கோடி கேட்டு மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தமோரிடம் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ் பி அன்பரசன் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்ற எனக்கு தெரிந்த நபர்.இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், மனைவியின் நடைகள் அனைத்தும் அடமானம் வைத்து அவை ஏலம் போகப்பதாகவும் அதனை மீட்க 5 இலட்சம்வேண்டும் என்றும் என்காலில் விழுந்து கெஞ்சினார். நான் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் என் சொந்த ஜாமீனில் 5 இலட்சம் பணம் வாங்கி கொடுத்தேன்.

இந்த நிலையில் தனியார் பத்திரிக்கையை சேர்ந்த நிருபர் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் மீது புகார் வந்துள்ளது அதை செய்தியாக வெளியிடப்போவதாக தெரிவித்தார். அவரிடம் நான் நடந்தவற்றை விளக்கமாக கூறினேன் இருப்பினும் என்மீது அவதூறு பரப்பும் விதமாக பொய்யான செய்தி அந்த பத்திரிக்கையில் செய்தி வெளியானது.

இதுகுறித்து திருவேங்கடத்தை தொடர்புகொண்டு பத்திரிக்கையில் தவறான செய்தி வெளிவந்துள்ளது எனகேட்டதற்கு, எனக்கு 1.50 கோடி கொடுத்தால் இதை நிறுத்திவிடுவதாகவும், இல்லை என்றால் உன்னையும் உன் தம்பியையும் மானத்தை வாங்கிவிடுவேன் என மிரட்டியுள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பணம் தறவில்லை என்றால் எந்த லெவலுக்கும் செல்வேன் என்றும் மிரட்டியுள்ளார். எனவே எனக்கோ, எனது குடுபத்திற்கோ திருவேங்கடத்தால் உயிருக்கு ஏதாவது ஆபத்து நிகழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், உண்மை நிலையை ஆராயாமல் பொய்செய்தியை தனியார் பத்திரிக்கை வெளியிட்டதால் பலரும் என்னை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பும்போது எனக்கு மிகுந்த மன உலைச்சல் ஏற்பட்டுள்ளதால் பொய்யான தகவலை பரப்பி வருபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க