August 16, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட துடியலூர் எம்.பி.சி. நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் குறித்தும், மேட்டுப்பாளையம் பிரதான சாலை துடியலூர் பி.சி.எஸ் நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் துடியலூர் டவர் லைன் ரோடு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கப்படுவதற்காக போடப்பட்டு வரும் கற்ச்சாலையின் தரம் குறித்தும் பார்வையிட்டார்.அதே போல் மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகில் கவுண்டம்பாளையம். வடவள்ளி, வீரகேரளம் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குடிநீர் குழாயில் நீர்கசிவு ஏற்பட்டு நீர் வெளியேறுவதை மாநகராட்சி துணை கமிஷனர் விமல்ராஜ் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (கிழக்கு) ஞானவேல், உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.