August 15, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் வீரபாண்டி பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஹோம் பார்க் கிரேட்டிவ் ஹவுஸஸ் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்ற நிலையில் கோவை மாவட்டம் தடாகம் சாலையில் உள்ள வீரபாண்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஹோம் பார்க் கிரேட்டிவ் ஹவுஸஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் வழங்கினார்.
முன்னதாக 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீரபாண்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இன்ஜினியர் ஏ.ஆர் கிருஷ்ணகுமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துய்மை ம்பணியாளர்களுக்கு இணைப்புகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
கொரோனா காலகட்டத்தில் ஹோம் பார்க் கிரேட்டிவ் ஹவுஸஸ் சார்பில் கோவை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக் கவசங்கள், மதிய உணவு மற்றும் பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு செய்து வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக இன்று சின்ன தடாகம் பகுதியில் உள்ள வீரபாண்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளருக்கு சுதந்திர தின விழாவைை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளைை இன்ஜினியர் ஏ. ஆர் கிருஷ்ணகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் துணைத் தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகன் செல்வம் பிரியங்கா மூர்த்தி செல்வராஜ் துணைத் தலைவர் ரத்னசாமி கவுன்சிலர்கள் சாரதாமணி ருக்குமணி நித்யா சுரேஷ் கருப்பசாமி யூனியன் கவுன்சிலர் சம்பத்குமார் செயலாளர் மூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.