August 14, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் ஊராட்சி நரிக்குறவர் காலணியை சேர்ந்தவர் ஜெஸ்டின் சுந்தர் சிங். இவரது மனைவி வெள்ளிமணி. இவரது தனது இரு குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் வெள்ளிமணி தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து அவரிடம் மேகொண்ட விசாரணையில் நிவார பொருட்கள் கொடுப்பதில் பஞ்சாயத்து தலைவரின் கணவர் அழைத்து மிரட்டுவதாக தெரிவித்தார்.இந்நிலையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர் நாகராஜ் மற்றும் வெள்ளிமணி செல்போனின் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.
அதில் வெள்ளிமணியின் கணவர் ஜெஸ்டின் சுந்தர் சிங் அதே பகுதியில் உள்ள சிலரையும், உறவினர்களை தாக்கியதாகவும்,இதனால் பஞ்சாயத்து தலைவரை பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் வந்ததாகவும், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸார் புகார் அளிப்பதாக கூறுவதாக, கணவரை அழைத்துக் கொண்டு வரும் படியும் கூறுகிறார்.
அதற்கு வெள்ளிமணி அவர்களை காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவிக்கிறார்.இந்நிலையில் ஆடியோவில் இவ்வாறு பேசிய நிலையில்,பொய்யான காரணத்தை கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில் வெள்ளிமணியின் கணவர் ஜெஸ்டின் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு பொய்யான காரணம் கூறி தற்கொலை முயல்வது, புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ ஆரம்பித்துள்ளது.