August 14, 2021
தண்டோரா குழு
கோவையில் வெவ்வேறு பகுதிகளில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகள் ஒரே நாளில் திருடு போய் உள்ளன.
கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ் குமார்(41). அவர் தனது பைக்கை கெம்பட்டி காலனி பகுதியில் நிறுத்தி வைத்திருந்த போது அதை போத்தனூரை சேர்ந்த ஷேக் பக்ருதீன் திருடியுள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்து பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் பக்ரூதினை கைது செய்தனர்.
அதே போல் ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ் கோர்ஸ் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் திருடு போய் உள்ளன. இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.