August 14, 2021
தண்டோரா குழு
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ரவி(61).இவர் தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டி ஏ.டி.டி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் பணமாகவும் கடந்த 2019 ம் ஆண்டு வழங்கியுள்ளார்.
இதனிடையே இரண்டு ஆண்டுகளாக வேலை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தனது மனைவியுடன் அந்த நிறுவனத்திற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
அந்நிறுவனத்தை சேர்ந்த பிரசாந்த், பாரதி ஆகியோர் பணத்தை தரமறுத்து இவர்கள் இருவரையும் தகாத வார்த்தையால் பேசியும், தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.