நாடு முழுவதும் வரும் (15ம் தேதி) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்போது இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் முழுமையாக சோதனை செய்யப்படுகிறார்கள். 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பயணிகள் கொண்டு வரும் உடமைகளும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றன. ரயில் நிலைய நுழைவு வாயில் வழியாக மட்டுமே பயணிகள் வரவேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு