August 12, 2021
தண்டோரா குழு
நோக்கியா போன்களின் தாயகமான ஹெச்எம்டி குளோபல், அதிகளவில் பிரபலமாகியுள்ள நோக்கியா சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ஒரு பகுதியாக, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ உடனான பிரத்யேக கூட்டுச் செயல்பாட்டுடன் நோக்கியா சி20 ப்ளஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிக மலிவான, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய நோக்கியா ஸ்மார்ட்போன்களாக விளங்கும் நோக்கியா சி-சீரிஸ் ஜியோ பிரத்யேகத் திட்டத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சலுகையுடன் கிடைக்கிறது, அதாவது, குறைந்தபட்ச ஆதரவு விலையாக 10 சதம் அல்லது ரூ.1,000 உடன் அதிகளவில் பலன்களைப் பெறலாம்; இவ்விரண்டில் எது குறைவானதோ அதனைப் பெற முடியும். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி, ஜியோ பிரத்யேகத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.4,000 மதிப்புள்ள பலன்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
6.5 ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், இரண்டு-நாட்கள் நீடிக்கும் பேட்டரி, 1.6 GHz ஆக்டா-கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்டுTM 11 செயல்பாட்டு அமைப்புடன் (தற்போதிருக்கும் பதிப்பு) ட்யூவல் பின்புற கேமிராக்கள் ஆகியவற்றுடன் பணியிலும், படிப்பிலும் விளையாட்டிலும் உங்களது நம்பகமான தொழில்நுட்ப உறுதுணையாக நோக்கியா சி20 ப்ளஸ் அமையும். இந்த புதிய ஸ்மார்ட்போனில் தனியுரிமை அம்சங்களான ஃபேஸ் அன்லாக், தனித்துவமான 1 ஆண்டு மாற்று உத்தரவாதம், நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் முத்திரை பதிக்கும் தரமும் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் நோக்கியா சி01 ப்ளஸ், நோக்கியா சி30 ஆகியவற்றை உள்ளடக்கியது நோக்கியா சி சீரிஸ் புதிய நோக்கியா சி01 ப்ளஸ், ஆரம்ப நிலை நுகர்வோருக்கான மிக மலிவான 4ஜி நோக்கியா ஸ்மார்ட்போனாக இருக்கும்; நோய்த்தொற்று காலத்தின் இடையே போன் அம்சத்தில் மேம்பாட்டை நுகர்வோர்கள் எதிர்பார்ப்பது, இந்தியாவில் டிஜிட்டல் செயல்பாட்டுக்கான தேவையை வலுப்படுத்தும். உங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும், நண்பர்கள் குடும்பத்தினர் சக பணியாளர்களோடு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும்போதும், இதிலுள்ள மிகத்தெளிவான 5.45 ஹெச்டிூ ஸ்கிரீன் அபாரமான காட்சி அனுபவத்தைப் பெற உதவும். அனைத்து நாட்களுக்குமான பேட்டரி திறன் எனும் வாக்குறுதியுடன், பணியிலும் விளையாட்டிலும் தடைகள் இல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் பார்த்துக்கொள்ளும்.
முன்புற, பின்புற 5எம்பி கேமிராக்களில் உள்ள ஹெச்டிஆருடன் கூடிய எல்,டி ப்ளாஷ் தெளிவான,பிரகாசமான புகைப்படங்கள், வீடியோக்களை அளிக்கும்.இதிலுள்ள பெரும் நினைவுத்திறன் அவற்றை நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பாக இருக்கச் செய்யும்.போன் செயல்பாடு இடைநின்றுவிடாமல்,செயலிகளுக்கு இடையே எளிதாக மாற்றிக் கொள்வதற்கு ஆண்ட்ராய்டுTM 11 (தற்போதைய பதிப்பு) வகை செய்யும்.கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் முத்திரை பதிக்கும் ஆயுள் மற்றும் உருவாக்கத் தரம்,1 ஆண்டுக்கான மாற்று உத்தரவாதம் ஆகியன சாதாரண போனில் இருந்து ஸ்மார்ட் போனுக்கு மாற விரும்பும் நுகர்வோர்களுக்கு மிகப்பொருத்தமானதாக நோக்கியா சி01 ப்ளஸ் இருக்கும்.
சி-சீரிஸில் மிக ஆற்றல்வாய்ந்த ஸ்மார்ட்போனாக உள்ள புதிய நோக்கியா சி30, இதுவரை நோக்கியா ஸ்மார்ட்போனில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பேட்டரி மற்றும் பெரிய ஸ்கீரினை கொண்டுள்ளது. இதிலுள்ள அற்புதமான திறன்கொண்ட 6000 அயுh பேட்டரி, இந்த பிரிவில் வலுவான பேட்டரியாக விளங்குவதோடு, ஒருமுறை சார்ஜ் செய்தாலே 3 நாட்களுக்கு பயன்பாட்டை தருவதாக உள்ளது.
இதன் 6.82 ஹெச்டிூ டிஸ்பிளே மிகச்சிறப்பான வீடியோ அனுபவத்தில் மூழ்குவதற்கேற்ற மிகப்பெரிய திரை அனுபவத்தை வழங்குகிறது. இதிலுள்ள ஈர்ப்பூட்டும் 13எம்பி டியூவல் கேமிராவுடன் நம்பகமான தரத்தில் உங்களது ஐடியாக்களை படம்பிடிக்கலாம். ஒரு உறுதியான பாலிகார்பனேட் ஷெல்லினால் நோக்கியா சி30 மூடப்பட்டிருக்கிறது இது ஒரு ஆண்டுக்கான மாற்று உத்தரவாதத்தைக் கொண்டிருப்பதால் கவலை கொள்ளாத அளவுக்கு போன் தரத்திலும் ஆயுளிலும் எங்களது சமரசமற்ற அர்ப்பணிப்பு உள்ளது. ஒரு தடையற்ற, ஆச்சர்யமூட்டும் அனுபவத்தைத் தரும் ஆண்ட்ராய்டு 11-ன் முழு பதிப்புடன், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கான காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்களுடன், காலத்தின் சோதனையைத் தாங்கிக்கொள்வது மட்டுமல்லாமல் உங்களையும் உங்களது பணியையும் நோக்கியா சி30 முழுமையாகப் பாதுகாக்கும்.
இது குறித்து ஹெச்எம்டி குளோபல் துணைத்தலைவர் சன்மீத் சிங் கோச்சார் கூறும்போது,
ஸ்மார்ட்போன் அனுபவத்தை பொது மக்களுக்கு எடுத்து செல்லும், ஒவ்வொரு இந்தியருக்கான மிகப்பெரும் பயன்பட்டை கட்டமைக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் சி-சீரிஸில் அனைத்து புதிய வகைகளையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவிலுள்ள எங்களது ரசிகர்கள் விரும்பக்கூடிய போன்களை வழங்குவதைத் தொடர்வோம்; ஆயுளுக்கான உத்தரவாதத்தினால் இவற்றை நீண்ட காலத்துக்கு வைத்திருக்க முடியுமென்பதால், பாதுகாப்பான முறையில் இணைப்பில் இருக்க இதன் மீது நம்பிக்கை வைக்கலாம்.
தனது நேர்த்தியான வடிவமைப்பு, வெற்றிக்கான அம்சங்கள், நுகர்வோரின் கைகளில் நிலைத்திருப்பதற்கான தரம் நோக்கிய அர்ப்பணிப்புதான் நோக்கியா சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சாராம்சம்; இவற்றை எங்களது ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், இன்று நோக்கியா சி20 ப்ளஸ்ஸை அறிமுகப்படுத்துகிறோம். இந்த சாதனம் இந்தியர்களின் வாழ்க்கைமுறைக்கும் வாழ்க்கைக்கும் மிகப்பொருத்தமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோவின் பிரத்யேக சலுகையையும் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். புதிய சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இச்சலுகை மிக மலிவானதாக ஆக்குவதோடு, ஜியோ மற்றும் நோக்கியா பயனர்களுக்கு இரு தரப்பிலும் அனைத்துவகையிலும் வெற்றி மதிப்பை கிட்டச் செய்யும். ஒவ்வொரு இந்தியரும் பணியிலும் கற்றலிலும் தங்களது முழுத்திறனை வெளிக்கொணர்வதற்கான, எங்கும் எப்போதும் பிடித்தமானவர்களோடு இணைப்பில் இருப்பதற்கான வாய்ப்பை எங்களது புதிய நோக்கியா சி-சீரிஸ் வகைகள் வழங்குமென்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
நோக்கியா சி20 ப்ளஸ்ஸில் உள்ள மிகப்பெரிய 6.5 ஹெச்டி ப்ளஸ் ஸ்கிரீன் நீங்கள் பணியாற்றும்போதும், உங்களை மேம்படுத்திக் கொள்ளும்போதும், படிக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் ஒரு வசதியான, ஆழமான காட்சி அனுபவத்தை வழங்கும். இதிலுள்ள 1.6GHz ஆக்டா-கோர் ப்ராசசர் நினைவுத்திறனை மேம்படுத்தி பல்வேறு செயலிகள் பிரச்சனையின்றி இயங்கும் வகையில் சிறப்பான திறனை வெளிப்படுத்துவதால், நீங்கள் எந்தவித கவலைகளும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்த உதவும். குவிந்து கிடக்கிற சமீபத்திய சீரிஸ்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள, உங்களுக்குப் பிடித்தமான கேம்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் மாற உதவும்.
மிகப்பெரிய அலுவல் திட்டங்களை மேற்கொள்ளும்போது, உங்களது ஸ்மார்ட்போன் பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது மிகப்பெரும் கவலையைத் தரும். நோக்கியா சி20 ப்ளஸ் உடன் இருக்கையில் பேட்டரி திறன் பற்றிய எண்ணமே எழாது. 4950 அயுh பேட்டரியின் வலுவான, இரண்டு நாட்கள் தாங்கும் திறன் ஆனது எவ்விதத் தடையும் இல்லாமல் முக்கியமான செயல்களில் இச்சாதனைத்தைப் பயன்படுத்த உதவும். மேலும், மேம்படுத்தப்பட்ட ஆற்றல் மேலாண்மை செயல்பாடு, உங்களைப் போன்றே உங்களது நோக்கியா சி20 ப்ளஸ்ஸ{ம் தொடர்ச்சியாகத் திறனுடன் செயல்படுவதை உறுதிப்படுத்தும்.
திறனை நம்ப முடியும்!
சமீபத்திய ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓஎஸ் வழங்கும் சமரசமற்ற செயல்திறன் உங்களது முழுத்திறனையும் உணரச் செய்ய உதவுகிறது நோக்கியா சி20 ப்ளஸ்.
ஆண்ட்ராய்டு 11-ன் (தற்போதைய பதிப்பு) திறன்கள் உங்களுக்கு வேகமான, எளிதான பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும்; மதிப்புமிக்க நினைவுத்திறனை (900எம்பி வரை வெர்சஸ் ஆண்ட்ராய்டு 10) சேமிக்கும். இதிலுள்ள செயல்பாட்டு அமைப்புகளால் உருவாக்கப்படும் தரவு பாதுகாப்புக்கான கூகுளின் வாக்குறுதி காரணமாக உங்களது தரவுகள், ஆவணங்கள், ஐடியாக்கள் பாதுகாக்கப்படும் என்பதால், ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது முழுமையாக நம்பலாம். புதிய மற்றும் உங்களது தரவு பாதுகாப்புக்கு எதிரான எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், நோக்கியா சி-சீரிஸின் இரண்டு ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அப்டேட்கள் எனும் வாக்குறுதியை நோக்கியா சி20 ப்ளஸ் கொண்டுள்ளது.
முன்னணி வகிக்கவல்ல வடிவமைப்பு மற்றும் ஆயுள்
அழகும் வலுவும் சேர்ந்த ஒரு கலவையாக, 1 ஆண்டு மாற்று உத்தரவாத பின்னணியைக் கொண்ட நோக்கியா சி20 ப்ளஸ் தரமான கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது வாழ்வின் தினசரி செயல்பாடுகளைத் தாங்கும் வகையில் நீடிக்கும் பாலிகார்பனேட் மேற்புறத்தைக் கொண்டுள்ளது. நோக்கியாவின் அதிக தரமான ஸ்மார்ட்போன் உற்பத்தியை உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஹேண்ட்செட் 50 கடுமையான ஹார்டுவேர் நம்பகத்தன்மை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. நோர்டிக் பாரம்பரியத்தினால் ஈர்க்கப்பட்டு காலத்தை வென்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளதால், நோக்கியா சி20 ப்ளஸ் மிக அழகாக இருக்கிறது.
ஈர்க்கும் தருணங்களை படம்பிடிக்கலாம்!
வாழ்வின் எந்த தருணத்திலும் ஏதாவது ஒன்றின் மீது ஈர்ப்பு நம்மில் எட்டிப் பார்க்கலாம்; அதன் உண்மையான தோற்றத்தை அப்படியே படம்பிடிக்க ஒரு ஸ்மார்ட்போன் தேவை. நோக்கியா சி20 ப்ளஸ்ஸில் உள்ள டுயல் ரியர் கேமிரா விரிவாக்கப்பட்ட வண்ணங்களில் அசத்தும் வகையிலான ஹெச்டிஆர் படங்களை தருகிறது. பின்னணியில் இருப்பதை மங்கலாக்குவதன் மூலமாக, உங்களது புகைப்படத்தின் மையப்பொருளை போர்ட்ரெய்ட்டில் உள்ளது போன்று ஆக்கலாம்.
நோக்கியா சி20 ப்ளஸ்ஸின் 32ஜிபி சேமிப்பும் 256ஜிபி வரை மெமரி கார்டு பயன்படுத்தும் வசதியும் அதிக எண்ணிக்கையிலான படங்களை எடுக்கும் ஆற்றலை அளிக்கிறது. கேலரி கோ மற்றும் சாதனத்தில் உள்ள கற்றல் உதவிகள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேமிக்க வழி காட்டும்; தானியங்கி முறையில் படமெடுத்தாலே இவற்றை அறிய முடியும்.
விலை மற்றும் சிறப்பு சலுகைகள்!
இந்தியாவில் கடல் நீலம், அடர் சாம்பல் வண்ணங்களில், 2/32ஜிபி மற்றும்
3/32ஜிபி செயல்பாட்டு அமைப்புடன், நோக்கியா சி20 ப்ளஸ் ரூ.8999 மற்றும் ரூ.9999 விலையில் சில்லறை விற்பனையகங்களில் நேரடியாகவும் இ-வர்த்தக தளங்கள், நோக்கியா.காம் இணையதளத்திலும் கிடைக்கும்.
நோக்கியா சி20 ப்ளஸ்ஸில் ஒரு பிரத்யேக ஜியோ சலுகையும் கிடைக்கிறது. முன்னரே உள்ள ஆதரவு விலையில் 10 சதம் அல்லது ரூ. 1000 இரண்டில் எது குறைவானதோ அது கிடைக்கும்; ஜியோ பிரத்யேக திட்டத்தின் படி ரூ.4000 மதிப்புள்ள கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தலாம்.
சில்லறை விற்பனையகம் அல்லது மைஜியோ செயலியில் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். சுயபதிவு முறையை பின்பற்றினால் 15 நாட்களுக்குள் சாதனத்தை ஆக்டிவேட் செய்து, சுயபதிவு செய்த 30 நிமிடங்களில் யூபிஐ மூலமாக வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலேயே ஆதரவு விலை பலன்களை பெறலாம்.
அனைத்து ஜியோ சந்தாதாரர்களுக்கும் கூடுதல் பலன்கள்:
ஏற்கனவே ஜியோ சந்தாதாரர்களாக இருப்பவர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் இருவருமே ரூ.249 மற்றும் அதற்கு அதிகமாக முதல் முறை ரீசார்ஜ் செய்யும்போது தகுதி பெறுவார்கள்.
கூடுதல் பலன்கள்சலுகை விவரங்கள் பலன் மதிப்பு ரூபாயில்,
PharmEasyPharmEasy-ல் வாங்கும் அனைத்து மருந்துகளுக்கும் 15 சதம் தள்ளுபடி மற்றும் கூடுதலாக 5 சதம் தள்ளுபடி 1,000 Myntra குறைந்த பட்சம் மதிப்பாக 999 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கும் போது 500 ரூபாய் வரையில் 10 சதம் தள்ளுபடி500 MakeMyTripMakeMyTripல் முதல் முறையாக விமான பயண டிக்கெட் முன்பதிவு செய்தால் 1,500 ரூபாய் வரையில் தள்ளுபடி 1,500 ரூபாய் வரையில் 10 சதம் தள்ளுபடி (புதிய வாடிக்கையாளர்களுக்கு) 1,200 ரூபாய் வரையில் 6 சதம் தள்ளுபடி (மீண்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு)1,500 ஓயோ அனைத்து வாடிக்கையாளர்களுக்கு 45 சதம் தள்ளுபடி1,000 என மொத்தம்4,000 கிடைக்கும்.