• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியன்ஆயில் நிறுவனத்தின் மிஸ்டு கால் வசதி அறிமுகம் !

August 9, 2021 தண்டோரா குழு

இண்டேன் எல்பிஜி (Indane LPG) வாடிக்கையாளர்கள், பதிவு செய்யப்பட்ட போன் நம்பரிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து எல்பிஜி ரீபிலை புக் செய்து கொள்ளலாம்.

பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குக்கு மற்றும் வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்துவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிக்கு ஏற்ப, இந்தியன்ஆயில் நிறுவனமானது, அனைத்து டொமெஸட்டிக் வகை வாடிக்கையாளர்களுக்கு புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கான மிஸ்டு கால் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.

நாடெங்கிலும் உள்ள விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், 8454955555 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளில், தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதியை இந்தியன்ஆயில் மட்டுமே அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் S.M. வைத்யா கூறியதாவது –

விரிவான வாடிக்கையாளர்கள் தொடர்பு வழிமுறைகளைக் கொண்ட நிறுவனமாக விளங்கும் நிறுவனமாக, நேற்றை விட இன்று சிறப்பானதைத் தர வேண்டும் என்கிற நோக்கத்துடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம். இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான முறையில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த புத்தம் புது வசதிகளை வழங்கி வருகிறோம். இந்த மிஸ்டு கால் வசதி என்பது எல்பிஜியை எளிதாகப் பெறுவதற்கு முக்கியமான பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. மேலும் இதுவே வாடிக்கையாளர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ரீபில் புக்கிங் செய்வதற்கும் புதிய இணைப்புகளுக்கும் மிஸ்டு கால் வசதி, குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்கல் ஏதுமில்லாத இந்த மிஸ்டு கால் வசதி, புதிய இணைப்பு பதிவு செய்வதற்கு, வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், சௌகர்யமானதாகவும் இருக்கும். மூத்த குடிமக்களுக்கும் ஊரகப் பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.

எல்பிஜி ரீபில் புக்கிங் செய்வதற்கும் பேமென்ட் செலுத்துவதற்கும், இந்தியன்ஆயில் நிறுவனமானது, தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை உபயோகத்தில் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம், IndianOil One App என்கிற செயலி மூலமாக அல்லது https://cx.indianoil.in என்கிற வலைதளம் மூலமாக புக் செய்து பேமென்ட் செலுத்தலாம். வாட்ஸ்அப் எண் 758888882 மூலமாக, எஸ்எம்எஸ் / ஐவிஆர்எஸ் (SMS / IVRS) (7718955555) மூலமாக வாடிக்கையாளர்கள் புக் செய்து பேமென்ட் செலுத்தலாம். அல்லது அமேசான் மற்றும் பேடிஎம் (Amazon & Paytm) தளங்களில் அலேக்சா (Alexa) மூலமாகவும் புக் செய்து பேமென்ட் செலுத்தலாம்.

இந்த வசதி அறிமுகமான நாளில், தலைவர் S.M. வைத்யா, வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லத்திலேயே, இரட்டை இணைப்பு பெறும் வசதியையும் (Double Bottle Connection) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சிங்கள் கனெக்ஷன் (SBC) வைத்துள்ளவர்களுக்கு இரட்டை சிலிண்டராக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை டெலிவரி பணியாளர் எடுத்துக் கூறுவார். இரண்டு சிலிண்டர் முறைக்கு மாறிக் கொள்ளலாம் அல்லது வழக்கமான 14.2 கிகி சிலிண்டருக்குப் பதிலாக, தயார் நிலைக்காக, 5 கிகி சிலிண்டர் பெறும் வழிமுறைறையும் அவர்கள் பெறலாம்.

மேலும் படிக்க