August 8, 2021
தண்டோரா குழு
தமிழகத்தைச் சார்ந்த 5 ஐந்து விளையாட்டு வீராங்கனைகள் சௌமியா, ஜெயஸ்ரீ ஹெப்சிபா,சஞ்சனா,தர்ஷினி மற்றும் ஒரு வீரர் ஜோஸ்வா ஒரு பயிற்சியாளரும் சிவசங்கர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள உலக மினி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணிக்காக பங்கு பெற உள்ளனர்.மினி கால்பந்து என்பது ஆறு நபர்கள் விளையாடக்கூடிய போட்டியாகும்.
இந்நிலையில், இந்த வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி ஆனது கோயம்புத்தூரில் உள்ள பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு மினி கால்பந்து சங்கத்தின் சேர்மன் மதிவாணன் மற்றும் தலைவர் எஸ்.கே பரணி தரன் மற்றும் துணைத் தலைவர் சாக்ரடீஸ் மற்றும் பொதுச் செயலாளர் கே.ஆர் சித்தேஸ்வரன் மற்றும் கோயம்புத்தூர் மினி கால்பந்து அசோசியேஷன் அவரது செயலாளர் சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை பாராட்டி வழி அனுப்பினர்.