August 7, 2021
தண்டோரா குழு
பவானி ஆற்றில் சிக்கி உயிருக்கு போராடியவரை ஊர்காவல் படை வீரர் காப்பற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில்
தண்ணீர் திறந்து விட்டப்பட்டுள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், இன்று ஊட்டி காத்தாடி மட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் (27) என்ற இளைஞன் எஸ்.எம் நகர் ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்டார்.
அப்போது அந்த வழியாக சென்ற
மேட்டுப்பாளையம் ஊர் காவல் படையை சேர்ந்த அசாருதீன் என்பவர் இதை கவனித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தீயணைப்பு துறையை சேர்ந்த தினேஷ் மற்றும் ஊர் காவல் படையை சேர்ந்த அசாருதீனும் ஆற்றில் சிக்கிய
சந்திரசேகரை பத்திரமாக மீட்டனர்.தகுந்த நேரத்தில் வந்த உதவிய ஊர்காவல் படை வீரருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.