• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலையத்திற்கு ‘பிளாட்டினம்’ விருது !

August 6, 2021 தண்டோரா குழு

தென்னிந்திய அளவில் கட்டமைப்பு வசதிகளில் முதலிடம் பெற்று கோவை ரெயில் நிலையம் ‘பிளாட்டினம்’ விருது பெற்றுள்ளது.

சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரெயில் நிலையமாக கோவை ரெயில் நிலையம் விளங்கி வருகிறது.’ஏ1’ அந்தஸ்து பெற்ற இந்த ரெயில் நிலையம் ஐ.எஸ்.ஓ., தர மேலாண்மை சான்றிதழ்,சுற்றுச்சூழல்,மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் ஆகிய மூன்றையும் ஏற்கனவே பெற்றுள்ளது.

‘கிரீன் ரேசியோ’ எனப்படும் பசுமை தரம் முனைப்பில் கடந்த, 2018-ம் ஆண்டு முதல்,கோவை இரயில்நிலைய வளாகத்தில் சூரியசக்தி மின்சாரம், மழை நீர் சேகரிப்பு, ‘மியாவாக்கி’ முறையில் மரம் நடுதல், 100 சதவீ தம் எல்.இ.டி.,விளக்குகள்,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குட்டி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தெற்கு ரெயில்வேயில் முதல் முறையாக, பார்வையற்றோருக்கு ‘பிரெய்லி போர்டு’ நிறுவப்பட்டது. நோயாளிகள், முதியோர் சென்று வர சாய்வு தளம், லிப்ட், தானியங்கி படிக்கட்டுகள்,தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கென தனி அறை என ஏராளமான சிறப்பு வசதிகள் கோவை இரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் ஆய்வுகளின் அடிப்படையில் பசுமை தரத்துக்கு உரியதாக கருதப்படும் ‘பிளாட்டினம்’ சான்றிதழை கோவை ரெயில் நிலையம் பெற்றுள்ளது. கட்டமைப்பு, ஆரோக்கியம், ஆற்றல், தண்ணீர் மேலாண்மை என 6 பிரிவுகளில் 100-க்கு, 83 புள்ளிகள் பெற்று தேசிய அளவில், ‘பிளாட்டினம்’ சான்றிதழ் பெற்ற 6-வது ரெயில் நிலையமாகவும், தெற்கு ரெயில்வேயில் முதல் ரெயில் நிலையம் என்ற பெருமையையும் கோவை ரெயில் நிலையம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க