• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் குறு சிறு தொழில் முனைவோர்கள் பாதிப்பு

August 4, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் குறு சிறு தொழில் முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குருந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கோவை மாவட்டத்தின் மின்பகிர்மான தலைமை மின் பொறியாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அவர் அளித்துள்ள மனுவில்,

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்கள் மூலமாக கடந்த 15 நாட்களாக ஒரு நாளைக்கு எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் 5 முதல் 10 முறை வரை, 10 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த அறிவிக்கப்படாத மின்நிறுத்தத்தால்
குறு சிறு தொழில் முனைவோர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு
வருகிறோம்.

குறிப்பாக இந்த அறிவிக்கப்படாத
மின்நிறுத்தத்தால் ஓடிக்கொண்டு இருக்கும் இயந்திரங்கள் சடன் என்று நிற்ப்பதால் இயந்திரத்தில் இருக்கும் ஜாப்புகள் பழுதாவதுடன், அதற்காக அமைக்கும் டூல்கள் உடைவதாலும் , கடுமையான பொருள் நஷ்டத்தை நாங்கள் சந்தித்து வருகிறோம். இதனால் எங்களுக்கு கிடைக்கும் சொற்ப்ப லாபங்களை கூட, ஏற்படும் பொருள் நஷ்டத்துக்கு கொடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு வருகிறோம். கடுமையான பாதிப்பில் இருந்து எங்களை பாதுகாக்கவும், அறிவிக்கப்பட மின்நிறுத்தம் செய்யப்படுவதில்
பாதுகாக்கவும் வேண்டுகிறோம்.

தற்போது மின் பராமரிப்புக்காக
அனைத்து துணை மின்நிலையங்களிலும் மாதம் ஒருமுறை மின்நிறுத்தம்செய்யப்பட்டும், அனுதினமும் அறிவிக்கப்படாத மின்நிறுத்தத்தால் பெரும் நஷ்டம் சந்திக்கும் தொழில் முனைவோர்களை பாதுகாக்க தங்கள் நடவடிக்கை எடுத்து தடை இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க