August 3, 2021
தண்டோரா குழு
கோவை இயக்குநர் ஆர்.பிசாய் இயக்கத்தில் தயாராகும் முதல் முத்தமே கடைசி முத்தம் படத்தின் துவக்கவிழா கோவையில் இன்று நடைபெற்றது.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் முதல் முத்தமே இறுதி முத்தம் என்ற திரைப்படத்தின் துவக்கவிழா நடைபெற்றது. இந்த படத்தை வசந்தகுமார், மணிகண்டன், மகாதேவன், முரளி கிருஷ்ணா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஆர்.பி.சாய் திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் விஷ்ணு பிரியன், மேக்னா எலன் ஆகியோர் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்கின்றனர்.
விழாவில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தொடர்ந்து இயக்குனர் ஆர்.பி.சாய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
எங்கள் குருநாதர் பாலு மகேந்திராவின் ஆசியில் இந்த படத்தை துவங்கியுள்ளோம்.தாய்க்கும், மகனுக்கு இடையேயான பாசத்தை இந்த படம் எடுத்துக்காட்டும். படத்தின் சூட்டிங், கோவை சுற்றுவட்டாரத்திலும், ஊட்டியிலும் நடைபெற உள்ளது. தேவா ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த படம் விருதுகளை குவிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என தெரிவித்தார்.
விழாவில் கோவை சினிமா வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் சண்முகம், கவுரவ ஆலோசகர் ஷீஜா, நடிகர் சாம் ஆண்டர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .