• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி மண் எடுப்பில் ஈடுபட்ட 3 வாகனங்கள் சிறைபிடிப்பு

August 2, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி கனிம வளங்கள் அதிகமாக சுரண்டப்படுவதாகவும் இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து செங்கல்சூளை களும் மூடப்பட்டது. இப்பகுதியில் யாரும் மண் எடுக்க கூடாது என்றும் உத்தரவிடப்படுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் தடாகம் சாலை காளையனூர் பழனி குட்டை பகுதியில் 2 ஜேசிபி மற்றும் 1 லாரி மண் எடுத்துக் கொண்டிருப்பதாக பெரியநாயக்கன் பாளையம் வடக்கு மண்டல துணை வட்டாட்சியர் சரவணகுமாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு மண்டல துணை வட்டாட்சியர், கோவை வடக்கு வட்டாட்சியர்,கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர், வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் குழு சம்பவ இடத்தில் மண்ணை எடுத்துக் கொண்டிருந்த வாகனங்க ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் அவர்கள் விவசாயத்திற்காக நிலத்தை சரி செய்வதாக தெரிவித்துள்ளனர்.ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் மூன்று வாகனங்களையும் சிறை பிடித்த அதிகாரிகள் தடாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் மண் எடுப்பில் ஈடுப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க