• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பேரூர் பெரியகுளத்தில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

August 2, 2021 தண்டோரா குழு

கோவை பேரூர் பெரியகுளத்தில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வாட்டர் வாரியர் எனும் விருது வழங்கியது.இந்த விருதுடன், விருது தொகையாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த விருது தொகையுடன் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு, பேரூர் பெரியகுளக்கரையில் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டது. மேலும், அமைப்பின் 200வது வாரக் களப்பணியும் நடந்ததையடுத்து, அதில் 200 வகையான மரக்கன்றுகள் வைத்து, மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதற்கு வாட்டர் வாரியர் அடர் வனப்பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்காக குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட 25 லோடு ஆகாயத்தாமரை கழிவுகளை அடியுரமாக கொட்டப்பட்டு, மூன்று பக்கங்களுக்கு வேலியிட்டு செடிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

200 வகையான மரக்கன்றுகள் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாட்டு வகை மரங்கள் சேகரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டன. இந்நிகழ்வில் தன்னார்வலர்கள், விரைவு அதிரடிப் படையினர், மற்றும் என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் மரக்கன்றுகள் நட்டனர்.

மேலும் படிக்க