August 2, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளதாக தெரிவித்தார். 2020 ஜனவரி மாதத்திற்கு மேல் கிராமசபை நடக்கவே இல்லை என்பதுதான் எங்களது குறை என்று தெரிவித்த அவர் இதனை மனுவாக அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பட்ஜெட்டில் கிராமசபைக்கு என தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அடுத்த கிராமசபை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார். மேலும் கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை என்பதனால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இன்று சில இரங்கல் வீடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதாகவும் நாளை செய்தியாளர்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.