• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக சாதனை படைத்த சத்குரு! – அரசியல், சினிமா பிரபலங்களும் பங்கேற்பு

July 31, 2021 தண்டோரா குழு

பிரபல சமூக வலைத்தளமான கிளப் ஹவுஸில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்ற உரையாடல் நிகழ்வில் 72 நாடுகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ வடிவில் கலந்துரையாடும் சமூக வலைத்தளமான கிளப் ஹவுஸ் ஆப் இந்தியாவில் சமீபகாலமாக பிரபலம் அடைந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ‘விஸ்வவானி’ என்ற ஊடகம் ‘ஓபன் ஹவுஸ் வித் சத்குரு’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை கிளப் ஹவுஸில் (ஜூலை 29) ஏற்பாடு செய்தது.

இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘Life and its ways’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கர்நாடக சட்டபேரவை தலைவர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, மக்களவை உறுப்பினர் சுமலதா அம்ப்ரீஸ், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் அமைச்சர் பி.எல்.சங்கர், ‘கிளப் ஹவுஸ்’ ஆப்பின் சர்வதேச தலைவர் ஆர்த்தி ராம்மூர்த்தி, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டனகோபிநாத், சினிமா பிரபலங்கள், கீர்த்தி குமார், பிரியங்கா உபேந்தரா, ரக்‌ஷித் ஷெட்டி, பாடகர் விஜய் பிரகாஷ் உட்பட பல பிரபலங்கள் சத்குருவின் உரையை கேட்க அந்த ரூமில் இணைந்தனர்.

பொதுவாக, கிளப் ஹவுஸில் ஒரு ரூமில் அதிகப்பட்சமாக 8 ஆயிரம் பேர் மட்டுமே இணைய முடியும். அதன்காரணமாக, சத்குரு பேச ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு உள்ளாகவே அந்த ரூம் ஹவுஸ் ஃபுல் ஆனது. இதை அறிந்த கிளப் ஹவுஸ் பின்னர், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக 12 ஆயிரம் வரை அதிகரித்தது. இருந்தபோதிலும் ஏராளமானோர் அந்த ரூமில் இணைய முடியவில்லை. இதன்மூலம், கிளப் ஹவுஸ் வரலாற்றில் இது புது சாதனையாக பதிவாகி உள்ளது.

இந்நிகழ்வை விஸ்வவானி ஊடகத்தின் ஆசிரியர் விஸ்வேஷ்வர் பட் ஒருங்கிணைத்தார். இதில் கரோனா பெருந்தொற்று, ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவ முறை, சமூக வலைத்தள கேலிகள், காவேரி கூக்குரல் திட்டத்தின் பணிகள், அரசியல் நடப்புகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.

மேலும் படிக்க