• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாட்சித் தேர்தலுக்கு கவர்ச்சிகர திட்டங்களை அறிவிக்க ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார் – அமைச்சர் சக்கரபாணி கோவையில் பேட்டி

July 31, 2021 தண்டோரா குழு

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் இதற்காக கவர்ச்சிகர திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாகவும் அமைச்சர் சக்கரபாணி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 98 லட்சம் நிதி திரட்டப்பட்டு முதற்கட்டமாக 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கோவை வந்துள்ளன.இந்த சூழலில், கோவையில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் அமைச்சர் சக்கரபாணி இன்று பி.எஸ்.ஜி மருத்துவமனையில் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்த முயற்சி செய்து வருகிறோம். மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசி கொடுத்தாலும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சி.எஸ்.ஆர் நிதி மூலம் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் கோவை மாவட்டத்தில் அதிக நிதி மூலம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். கோவையில் 11 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் கடந்த சில நாட்களை விட 20 என்ற எண்ணிக்கையில் தான் தொற்று அதிகரித்துள்ளது.தொற்றை குறைக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை- கேரள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. தொடர்ந்து ஆய்வு பணிகளுக்காக அமைச்சர்கள் வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும் கோவை வந்து ஆய்வு செய்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்றவர் முதலமைச்சர். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் இது வெளிப்படும். கோவையில் வெற்றி பெறுவோம். இதற்காக கவர்ச்சிகளை திட்டங்களை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க