July 31, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் அடர்வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதன் காரணமாக சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. பல இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக மாநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநகர் பகுதிகளை பசுமையாக்க ரிசர்வ் சைட்டுகளில் அடர் வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘மாநகராட்சி நிர்வாகம் சார்பாக முதல் கட்டமாக மாநகர் பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 100 ரிசர்வ் சைட்டுகளில் அடர்வனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து அதற்கான ஸ்பான்சார் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.