• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாற்று திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம் !

July 30, 2021 தண்டோரா குழு

மாற்று திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த கோவை மாவட்ட ஆட்சியர்.கண்ணீர் மல்க குடும்பத்தினர் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளியான வேல்முருகன்.இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மூத்த பெண் மகள் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.இவரது இளைய மகன் அழகுமணிக்கு 3 வயதாகிறது. பெட்டி கடை நடத்தி வந்த வேல்முருகன் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தனக்கு உதவிடுமாறு கடந்த ஜூலை 5ம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தார்.

இதனையடுத்து அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு மாற்று திறனாளி சிறுவன் அழகுமணி மற்றும் சிறுவனது தந்தைக்கு காலணிகள் வழங்கபட்டது.மேலும் பள்ளி மாணவிக்கு மிதிவண்டி புத்தக பை உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.மாற்று திறனாளி சிறுவனுக்கு வாஞ்சையும் காலணிகளை மாவட்ட ஆட்சியர் பொருத்தினார்.

இதனை கண்ட வேல்முருகனின் குடும்பத்தினர் கண் கலங்கியபடி நன்றி தெரிவித்தனர். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு குடிசை மாற்று வாதியத்தில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

மேலும் படிக்க