July 28, 2021
தண்டோரா குழு
கோவையில் இன்று 179 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 179 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,28,685 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்,கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2169 ஆக உயர்ந்தது. அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 207 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,24,599 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 1,917 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.