• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா

July 28, 2021 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.APJ.அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிறு துளி மற்றும் ரோட்டரி சங்கத்தினர் மரக்கன்றுகள் நட்டனர்.

பிரபல சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு இயக்கமான சிறுதுளி, கோவை ரோட்டரி சங்கம் கேலக்ஸி உடன் இணைந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.APJ.அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் பசுமை பாரதம் எனும் மாபெரும் கனவை நனவாக்கி பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக, தொடர்ந்து மரம் நடும் பணியை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாவட்ட கவர்னர் Rtn.ராஜசேகர் சீனிவாசன் முன்னிலையில் ஐயாயிரம் மரக்கன்றுகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பட்டது. இதனை சமூக ஊடகவியலாளர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தி செயல்படுத்தும் விதமாக ஒரு சமூக ஊடக சவால் ஒன்றை “Plant4LifeChallenge” எனும் பெயரில் அறிவித்துள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வில் நாமும் பங்குபெற செய்ய வேண்டியவை:

1. உங்கள் பகுதியில் ஒரு மரக்கன்றை நடுங்கள்.

2. அதை ஒரு புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்யுங்கள்.

3. உங்கள் சமூக ஊடக பக்கங்களில் அதை பதிவு செய்து @siruthuli ஐ டேக் செய்யுங்கள்.

4.#Plant4LifeChallenge – இந்த hashtag ஐ பயன்படுத்துங்கள்.

5. உங்கள் நண்பர்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் உங்களை பின் தொடர்பவர்ககளையும் இந்த சவாலில் பங்கேற்க அழைப்பு விடுங்கள்.

இந்த பசுமை புரட்சி நிகழ்வில் கோவை ரோட்டரி சங்க தலைவர் Rtn. கற்பகம் முத்துராமன், செயலாளர் Rtn.பழனியப்பன், திட்ட இயக்குநர் Rtn.J. பிரேம் குமார், சிறு துளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், DRDA திட்ட இயக்குநர். கவிதா, அண்ணா பல்கலைக் கழக டீன் Dr.K. ரவிச்சந்திரன் , ரோட்டரி சங்க உறுப்பினர்களும், சிறு துளி அமைப்பின் உறுப்பினர்களும், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த மரம் நடு விழாவானது, அண்ணா பல்கலை கழகத்தின் உதவி பேராசிரியர் Dr. A. சிவகுமார், பல்கலை கழகத்தின் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்களின் பங்களிப்போடு இனிதே நிறைவேறியது. இந்நிலையில், இனி வரும் காலங்களில், 100001 மரக்கன்றுகளை நட்டு பயனடைவதற்கான பெரும் முயற்சியாகும்.இன்று இது நமக்கான நேரம். நமது பசுமை போர்வையை வளர்க்கவும், பாதுகாக்கவும் கை கோர்த்து ஒன்றிணைவோம்.

மேலும் படிக்க