• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒவ்வொரு இந்தியரும் வளமாக சொத்து சேர்த்து தர எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி விருப்பம் !

July 28, 2021 தண்டோரா குழு

“ஒவ்வொரு இந்தியருக்கும், சொத்துக்களை உருவாக்கித்தர வேண்டும் என்ற விருப்பத்தோடும்,நோக்கத்தோடும் செயல்பட்டு வருகிறது எச்டிஎப்சி சொத்து மேலாண்மை நிறுவனம்,” என அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நவ்நீத் முனட் பேசினார்.

எச்டிஎப்சி ஏஎம்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நவ்நீத் முனட்பங்குதாரர்களிடையே பேசியதாவது :-

எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி, மரபு சார்ந்த, மக்கள், முறைகள், தயாரிப்புகள், செயல்திறன், பங்களிப்பு மற்றும் தளங்கள் என அனைத்து வகைகளிலும் வாய்ப்புகளை மூலதனமாக்கும் நிலையை பெற்றுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வலுவான வளர்ச்சியை மீயுச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பெற்றிருந்தாலும், இந்தியாவின் பயனாளர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.

தேசிய அளவில் நோய் தொற்று குறைந்து வரும் இந்த சமயத்தில், தடுப்பூசி போடும் பணியும் வேகம் பிடித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், பொருளாதாரம் நிலையான மீட்சியடையும் என்ற நம்பிக்கை உள்ளது.நல்ல காலம் இருக்கிறது என்பதை சந்தை நமக்கு சொல்கிறது. வெளிப்படையாக செயல்பட அனைத்து விதத்திலும் நம் மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

எங்களது பங்குதாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அதிநவீன தொழில்நுட்ப முறைகளை அனுபவம் பெறும் வைகையில் பயன்பாட்டிற்கு அளித்துள்ளோம். வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வைகையில், எங்களது டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம்,” என்றார்.

மேலும், பங்குகள் முதலீட்டு விரிவாக்கம் பற்றி அவர் கூறுகையில், “தற்சமயம், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான சொத்துக்கள்ஃ சிரத்தையான தயாரிப்புகளை தருகிறோம். தொடர்ந்து புதிய சந்தை வாய்ப்புகளை ஆராய்ந்து, வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்கள் இந்த திட்டங்களில் இருந்து பயன்பெறும் வைகையில் உருவாக்கி வருகிறோம்.

கடந்த ஆண்டு எச்டிஎப்சி டிவிடென்ட் ஈல்டு நிதி மற்றும் எச்டிஎப்சி பாங்க் இடிஎப் ஆகியவற்றை உருவாக்கினோம். சந்தை மிகவும் உயர்ந்துள்ளது. வங்கிகளில் குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறது. இந்த சமயத்தில் நல்ல வருவாய் தரும் சமநிலைப்படுத்தப்பட்ட நிதி திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர். எங்களது ஹைபிரிட் நிதி மற்றும் சொத்து பங்களிப்பு கொண்ட தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் தங்களது சொத்து வகைகளை சமநிலைப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

அதோடு சந்தை வளர்ச்சிக்கு ஏற்பட இது செயல்படும். விரைவில் அடுத்த சில காலாண்டுகளில் எங்களது திட்டங்களை விரிவாக்கம் செய்வதோடு, குறிப்பிட்ட துறை சார்ந்த திட்டங்கள், சர்வதேச சந்தை மற்றும் நிலையான யுக்திகளை உருவாக்க உள்ளோம்.

முதலீட்டு மேலாண்மை என்ற கலாச்சாரத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு சரியானதை செய்கிறோம். எச்டிஎப்சி ஏஎம்சி யின் நம்பகத்தன்மை, வாடிக்கையளர்கள் தெளிவான ஆர்வத்தில் இருக்கிறது. மிக உயர்ந்த நம்பகத்தன்மைக்கான பொறுப்புகள், வெளிப்படைத் தன்மையிலும், நல்ல நிர்வாகத்திலும் உள்ளது. தங்களது சேமிப்பை, எங்களிடம் முதலீடு செய்வதால், நிதி தேவையை சரி செய்து கொள்ள முடியும் என்ற வலுவான நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக எங்களது கலாச்சாரம் உள்ளது.

எச்டிஎப்சி ஏஎம்சி மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எங்களது வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள், சேவையளிப்போர் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எங்களது தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும்,வளர்ச்சிக்கான திசை காட்டி வரும் செபி க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு, முனாட் பேசினார்.

மேலும் படிக்க