July 27, 2021
தண்டோரா குழு
கோவை மாநகர பகுதிகளில் பஸ் லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்க வேண்டும் போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் கூறியுள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியிலுள்ள மாநகர காவல் சமுதாயக் கூடத்தில் பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஆட்டோ உரிமையாளர்களுடன் போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில்
போக்குவரத்து துணை ஆணையர்
செந்தில்குமார் பேசும்போது,
30 கிலோ மீட்டர் வேகத்தில் பஸ் லாரி மற்றும் ஆட்டோக்கள் இயக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் காந்திபுரம் கணபதி 100 அடி ரோடு கிராஸ் கட் ரோடு சுக்ரவார் பேட்டை செல்வபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் சுயகட்டுப்பாடு வாகனங்களை இயக்க வேண்டும். 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டால் சாலை விபத்துகள் மிகவும் குறைந்து விடும்.
மேலும் வாகனங்கள் அதிக வேகம் கொண்டு இயக்கினால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்குமார் எச்சரித்தார்.