July 27, 2021
தண்டோரா குழு
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்த எடயூரப்பா அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக, பாஜக எம்.எல்.ஏக்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், இக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.
இதனை கர்நாடக பாஜக மேலிட பார்வையாளர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.