July 27, 2021
தண்டோரா குழு
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையால் தமிழக முதல்வர் சமூக நீதி காக்க தவறி விட்டதாக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினர் கோவையில் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,தமிழக அரசு வெளியீட்டுள்ள , வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கொடுக்க தற்போதைய அரசு வெளியிட்ட அரசாணை,பிற்படுத்தபட்டோர் பட்டியலில் வன்னியர் அல்லாத 253 சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எந்தவிதமான புள்ளி விவரம் இல்லாமல்,முந்தய அ.தி.மு.க அரசு தேர்தலுக்காக அவசர அவசரமாக இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டுவதாக கூறிய அவர், சமூதாய ரீதியாக தரவுகளை ஆய்வு செய்த பிறகே இட ஒதுக்கீடுகளை அறிவிக்க வேண்டும் அதுதான் சரியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த அரசாணை பிற்படுத்தப்பட்டோர் வயிற்றில் அடிப்பது போன்று இருப்பதாக கூறிய அவர்,தற்போதைய அரசிடம் இது குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்னரே கூறி வந்ததாக கூறிய அவர், ஆனால் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லாமல் அவசர கதியில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
இதனால் மற்ற சமூகத்தினர் புறம் தள்ளப்பட்டு வருவதாகவும்,அதிமுக, திமுக கட்சிகள் ஓட்டு வங்கிக்காகவும், தேர்தலுக்காகவும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இட ஒதுக்கீடு கொடுத்து வருகிறார்கள் எனவும் குற்றம்சாட்டிய அவர்,தேர்தலுக்கு முன்னதாக சமூக நீதி காப்போம் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை காக்க அவர், தவறிவிட்டார் எனவும், தமிழகத்தில், மாவட்டம் தோறும் கிராமம் கிராமாக சென்று இந்த அரசாணையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இளைஞர்களுக்கும் விளக்க இருப்பதாகவும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.