July 27, 2021
தண்டோரா குழு
கோவை பேரூர் அருகே பேரூர்-செட்டிபாளையம் சாலையில் பாக்கியநாதன் (62) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஒட்டலை இரண்டு வருடமாக அவர் நடத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த நான்கு மாதங்களாக ஒட்டலுக்கு உண்டான வாடகை கொடுக்க முடியாததால் அந்த இடத்தின் உரிமையாளர் பாக்கியநாதனை கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.இதனை அடுத்து கடையை காலி செய்வதற்காக பொருட்களை எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது மதுபோதையில் இருந்த பாக்கியநாதனின் மகன் சபரிநாதன் (33) கடையை காலி செய்ய வேண்டாம் என கூறி பாக்கியநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சபரிநாதன் அவரது தந்தை பாக்கியநாதனை கையால் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார்.அதில் அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து பாக்கியநாதன் கோபத்தில் வீட்டில் இருந்த இரும்புசுத்தி மற்றும் மூங்கில் கம்பால் சபரிநாதனை அடித்துள்ளார்.அதில் சபரிநாதனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் இறந்து விடுகிறார்.
இதனைத்தொடர்ந்து பாக்கியநாதன் பேரூர் காவல் நிலையத்தில் ஆஜராகி பேரூர் காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறுகிறார்.இதனை அடுத்து உதவி ஆய்வாளர் பொன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று சபரிநாதனின் பிரேதத்தை கைப்பற்றி, பாக்கியநாதனை கைது செய்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.