July 27, 2021
தண்டோரா குழு
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் சுமையா பானு மற்றும் முகமது முஸ்தபா தம்பதியினர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயது மற்றொரு குழந்தைக்கு 40 நாட்களும் ஆகி உள்ளது. இந்த நிலையில் முகமது முஸ்தபா மற்றும் அவருடைய தாயார் சபியா மற்றும் தங்கைகள் சபானா ஆகியோர் சுமையா பானுவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
இருந்தபோதும் சுமையா பானு அமைதியாக பொறுமை காத்து வந்தார். இந்த நிலையில் பிறந்த குழந்தையுடன் இருந்த சுமையா பானுவிடம் தொடர்ந்து முகமது முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து அடித்துள்ளனர்.இதனால் சுமையான கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்காக இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
அப்போது இரண்டு மணி நேரம் கழித்து மனுவை பெற்றுக் கொள்வதாக சமூகநலத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.3 மணி நேரம் ஆகியும் சமூகநலத்துறை அதிகாரிகள் மனுவை பெற்றுக் கொள்ளாததால் மனமுடைந்த சுமையா பானு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசி போராட்டத்தை கைவிட வலியுறுத்தும் சமூக நலத் துறை அதிகாரியை சந்தித்து அவருடைய மனுவை அளித்தார்.